earn money

genuinemails.com

Wednesday, June 30, 2010

ஆண்கள் அறிக - (கவிதை) - தாமரை

காதல் சொல்லும் கணத்தில்கூட
முதல் காதலிக்கான கவிதை
வாசிக்கப்படுகிறது.

கல்யாணத்துக்கு நெருக்கும்
பழுத்த காதலிகளிடம்
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின் 
திருமணத்தைப்பற்றிப் பதறுகிறீர்கள்...

உங்களை நம்பி ஓடி வந்து
மாலை மாற்றிக்கொண்டவளிடம்
'என் அம்மாவைவிட்டு
வந்துவிட்டேனே' என்று
புலம்புகிறீர்கள்...

அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை
உறிஞ்சிக்கொண்டே, 
'என் அம்மா வைத்தால்
ஊரே மணக்கும்' என்கிறீர்கள்...

'என் மனைவிக்கு மிகவும் பிடித்தது
மல்லிகைப் பூ' என்று
கைம்பெண்ணிடம் பூ வாங்கும்போது
முணுமுணுக்கிறீர்கள்...

வாழ்வின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டு இருப்பவளிடம்
எப்படி உங்கள் பெண் குழந்தைகள்
தேவதைகளாக இருந்து 
உங்களைக் காக்கிறார்கள் 
என்று வியக்கிறீர்கள்...

மரணப் படுக்கையில் இருப்பவளிடம்
உங்கள் மனைவி பிரசவத்தில்
பிழைத்த கதையையும்
விபத்தில் சிக்கியவளிடம் உங்கள்
குருதிக் கொடையால் கண் விழித்த
கல்லூரிப் பெண்கள்பற்றியும்
விவரிக்கிறீர்கள்...

பிள்ளையற்றவளிடம் உங்கள்
பாட்டி பெற்ற பதினாறைப்
பட்டியலிடுகிறீர்கள்...

நாட்டியக்காரியின் வீட்டை
நாடி வந்துவிட்டு
அவள் காலை நக்கிக்கொண்டே 
உங்கள் வீட்டுக் 'குத்து விளக்கை' எண்ணிக் 
கண்ணீர் உகுக்கிறீர்கள்...

காதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும்
ஒரு பொழுதேனும் இடைமறித்து
'அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து
மகேந்திரன் கொடுத்த முத்தத்துக்கு
ஈடாகாது எதுவும்' என்று
சொல்ல வேண்டும்.

கண்ணகிகளை மாதவியாக்கும்போது
நீங்கள் நகுலன் அல்லது
சகாதேவனாகிறீர்கள்.

இடம் பொருள் ஏவலற்றுப்
பிற பெண்களைப்பற்றிப் பேசும்
ஆண்கள் அறிக,
உங்களுக்கான முத்தம்
வேறொரு உதட்டில்
இடப்பட்டுவிட்டது!

-தாமரை

Wednesday, June 23, 2010

‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே!’  

சிலி நாட்டில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க் கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும்,எதிர்ப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலை யிலும், 69 வயதான புரட்சிக்கவி பாப்லோ நெருடா, ராணுவ நடவடிக் கையைக் கண்டு கொதித்தெழுந்தார். புதிய ஆட்சியை விமர்சனம் செய்ததால், பாப்லோ நெருடாவுக்கு மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, எவ்வித சிகிச்சையும் அளிக்கப் படாமலே மரணமடைந்தார் பாப்லோ. அவரது இறுதி ஊர்வலத் தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய புரட்சிக் கவிதை களுடன், ‘குற்றம் கண்டு கொதிப்பவ னுக்கு எதுவும் சாத்தியமே!’ என்ற அவரது மந்திரச் சொல்லும் படிக்கப் பட்டது. அதைக் கேட்டதும், மக்கள் கோபம் அப்படியே புதிய  ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது. பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட் டமாக மாறி, பெரும் புரட்சி நடந்து, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது. 

லத்தீன் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் மத்தியப் பகுதியில் இருக்கும் ‘பார்ரல்’ என்கிற சிறு கிராமத்தில் 1904&ம் ஆண்டு பிறந்தார் பாப்லோ நெருடா. இவர் பிறந்த ஒரு மாதத்திலேயே அவரது தாய் மரணம் அடைய, வளர்ப்புத் தாயிடம் வளர்ந் தார். கவிதை எழுதுவதில் மிக ஆர்வமாக இருந்த பாப்லோ, பதினைந்தாவது வயதிலேயே ‘மழை எங்கே பிறந்ததோ..?’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். பத்தொன்பதாவது வயதில் வெளியிட்ட, ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு, அவருக்கு நாடெங் கிலுமிருந்து பெரும் புகழைக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த வயதில், செக்கோஸ்லோவேகியா நாட்டின் புரட்சிக் கவிஞன் ‘நெருடா’ எழுதிய கட்டுரை ஒன்றில், ‘நாட்டில் குற்றம் நடப்பதைக் கண்டு ஒதுங்கி நிற்பவர்கள், வாழ்வில் எதையும் சாதிக்க மாட்டார்கள். குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே! அவனால் நாட்டையே தட்டி எழுப்ப முடியும்’ என்ற வரிகளைப் படித்தபோது, ரத்தத்தில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு துடிப்பும் உத்வேகமும் பெற்றார் பாப்லோ. நெருடாவின் ரசிகனாகி, அந்தக் கவிஞனின் பெயரையே தன் பெயருடன் இணைத்துக்கொண்டு, ‘பாப்லோ நெருடா’ என்ற பெயரில் புரட்சிக் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இருபத்துமூன்றாம் வயதிலேயே பெரும் கவிஞராகப் புகழ் பெற்று, சிலி நாட்டுத் தூதுவராக நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று, ‘குற்றம் கண்டால் கொதித்தெழ வேண்டுமென’ புரட்சி விதையை மக்கள் மனங்களில் தூவினார். 


ஸ்பெயின் நாட்டில், 1936&ம் ஆண்டு உள்நாட்டுக் கலவரம் நடந்துகொண்டு இருந்தபோது அந்நாட்டுத் தூதராக இருந்த பாப்லோ, புரட்சிப் படையினருக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுத்தார். புரட்சியைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டி, அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஸ்பெயின். தாய்நாடு திரும்பிய பாப்லோ, அப்போதைய சிலி அதிபரின் போக்கு முதலாளித்துவத்தின் பக்கம் இருப்பதைக் கண்டு அதிர்ந்து, ‘நம் நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார் அதிபர்’ என்று ஆவேசமாகக் குற்றம்சாட்ட, நாட்டில் கலவரம் தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டி, அவரை போலீஸ் கைது செய்ய விரைந்தது. பாப்லோ உடனே நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யா, கியூபா, பொலிவியா எனப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கே நடந்த புரட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். பொலிவியா வில் சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடா எழுதியது. 


‘ஒரு கண்டத்தின் தலை விதியையும், அதன் கனவுகளையும் உயிரோட்டமாகச் சித்திரித்தவர்’ என்று பாப்லோவுக்கு 1971&ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ‘தனி மனித துதிபாடலை ஒழிக்க வந்திருக்கும் எனக்கு சிலை அமைத்துவிடாதீர்கள்’ என்று தன்னைப் புகழ வந்தவர்களிடமிருந்து விலகி ஓடினார் பாப்லோ. குற்றம் கண்டு கொதித்தெழுந்து இறுதி வரை போராடியதால் தான் இன்றளவும் புரட்சிக் கவிஞராக மதிக்கப்படுகிறார் பாப்லோ! 


 - எஸ்.கே.முருகன்

Tuesday, June 22, 2010

என்ர வீரம்!

வாய் முத்திச்
சொல்தடிச்சு,

இழுபறி-கைகலப்பாகிச்
சட்டை கிழிய,

உதடுவெடிச்சு ரத்தம் வர,

முடியெல்லாம் பிச்செறிஞ்சு
விழுந்துபுரண்டுருண்டெழும்பி

இனி -
ஏலாதெண்டு தெரிஞ்சு...

தலைதெறிக்கத் தப்பியோடி,

நாய்க்கழிவு, வால் எல்லாம் மிதிச்சு
அதுவும் குலைச்சுத் துரத்த
உச்சுக்காட்டி,

அரைக்கழிசான் இழுத்துப் பிடிச்சு,

ஓடிப் படலைபாய்ஞ்சு,

கதவும் இறுக்கிமூடி

"ஏலுமெண்டா,
என்ர அப்பர் வீட்டிலயிருக்கேக்க
வந்து பாரடா!"வெண்டன்.

(இப்போதைக்கு இது போதும்!)

கடவுளைச் சாகாமல் காத்த எம்.எஸ்.வி!!!

'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...கடவுள் சாகா வரம் பெற்றவர்...
எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.
கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.


எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.


உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...வாட வேண்டும் என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.


கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.

'வானம்பாடி' படத்தில்..டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பாடல் வரியில் கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல...'சங்கே முழங்கு' படப் பாடலிலும் எம்.ஜி ஆரின் திருப்திக்காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.

'நாலு பேருக்கு நன்றி...
அந்த நாலு பேருக்கு நன்றி...

தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து து}க்கிச் செல்லும்

அந்த நாலு பேருக்கு நன்றி..'

என்று கவியரசர் எழுதிய பாடலில் வரும்
கடைசி சரணத்தில்..

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

போகும் போது வார்த்தை இல்லை...
போகு முன்னே சொல்லி வைப்போம்...'

என்று முடித்திருந்தார்.

'போகும் முன்னே சொல்லி வைப்போம்..'என்ற வார்த்தையை கொஞ்சம் மாற்றலாமே... என்று எம்.ஜி.ஆர்..அபிப்பிராயப்பட்டார்.
உடனே கவியரசர்..அந்த சரணத்தை..சிறு மாற்றங்களுடன்...

''வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றிப் போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...'

என்று எழுதிக் கொடுக்க...
மக்கள் திலகத்தின் முகத்தில்...பரம திருப்தி.

தனது பாடல்களில்...
வலிமையான எதிர் மறை வார்த்தைகள்.. அல்லது அறச் சொற்கள் வருவதை எம்.ஜி.ஆர் தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டாகும்.

உதிர் இலைகள்


கடவுளிடம்
மனு ஒன்றை அளித்தேன்
பரிசீலிக்கப்படவில்லை
இன்றுவரை
மரங்கள்
இலைகளை
உதிர்த்த வண்ணம் தான்
இருக்கின்றன. 

வெள்ளை நிறத்திலொரு... கவிதை - R.Parthipan (Poem)